திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலை ஆகியவற்றிற்கு சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டுப் பதிவு அமைப்பினால் புவிசார் குறியீடு (Geographical Indication - GI) வழங்கப்பட்டுள்ளது.
பூட்டு ஆனது அதன் உயர்ந்த தரம் மற்றும் நீடித்த உழைப்பு ஆகியவற்றிற்காக புகழ் பெற்று விளங்குகின்றது.திண்டுக்கல் நகரம் பூட்டு நகரம் என்று கூட அழைக்கப் படுகின்றது.
இந்தத் தொழில் துறையின் வளர்ச்சிக்கு இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் ஏராளமான இரும்புத் தாதுக்கள் முக்கியக் காரணமாக விளங்குகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தாலுகா முழுவதிலும் கண்டாங்கி பருத்திப் புடவைகள் தயாரிக்கப் படுகின்றன.
அவை பெரிய மாறுபட்ட ஓரக் கோடுகளினால் வகைப்படுத்தப் படுகின்றன.கண்டாங்கி சேலைகளில் சில சேலைகள் மூன்றில் இரண்டு மடங்கு வரை ஓரக் கோடுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றன.