TNPSC Thervupettagam

தினசரி நிலக்கரி இருப்பு அளவு

August 16 , 2023 339 days 231 0
  • மார்ச் 31 ஆம் தேதியன்று 2 மில்லியன் டன்னாக இருந்த தமிழ்நாட்டின் தினசரி நிலக்கரி இருப்பு அளவானது ஜூலை 26 ஆம் தேதியன்று 1.5 மில்லியன் டன்னாகக் குறைந்து உள்ளது.
  • இது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களை 10 நாட்கள் வரை இயக்க மட்டுமே போதுமானதாகும்.
  • மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வழக்கமான பயன்பாட்டிற்கான தேவைக்கு மாறாக வெறும் 3% நிலக்கரி மட்டுமே கையிருப்பில் இருந்தது.
  • வடசென்னை மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் அந்தந்த நிலையங்களின் வழக்கமான பயன்பாட்டிற்கான தேவைக்கு மாறாக தலா 19% அளவு கையிருப்பு உள்ளது.
  • தென் மாநிலங்களிலேயே தமிழகம் தான் அதிக ஆற்றல் நுகர்வைக் கொண்டுள்ளது.
  • ஏப்ரல் 20 ஆம் தேதியன்று தமிழக மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 19,387 மெகாவாட் மின் தேவை பதிவாகியுள்ளது.
  • அன்று, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 423.785 மில்லியன் அலகுகள் தினசரி நுகர்வு பதிவு செய்யப்பட்டது.
  • ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று, மாநிலத்தின் உச்ச கட்ட மின் தேவை 15,928 மெகா வாட்டாகவும், மாநிலத்தின் தினசரி நுகர்வு 345.834 மில்லியன் அலகாகவும் இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்