லண்டனில் நடந்த ஏலத்தில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மைசூர் ஆட்சியாளரான திப்பு சுல்தானின் வாள் 14 மில்லியன் பவுண்டு விலைக்கு ($17.4 மில்லியன் அல்லது ₹ 140 கோடி) விற்கப்பட்டது.
திப்பு சுல்தான் புகழுக்குக் காரணம் அவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த போர்களில் பெற்ற வெற்றியாகும்.
1775 ஆம் ஆண்டு மற்றும் 1779 ஆம் ஆண்டு ஆகியவற்றுக்கு இடையில் பல முறை மராட்டியர்களுக்கு எதிராக இவர் போரிட்டார்.
இந்த வாள் திப்பு சுல்தானின் அரண்மனையில் ஒரு தனிப்பட்டத் தங்கும் பகுதியில் இருந்து கண்டெடுக்கப் பட்டது.
திப்பு சுல்தான் தனது அரசை மிகவும் தைரியமாகப் பாதுகாத்ததால் அவருக்கு "மைசூர் புலி" என்று பட்டப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டது.