TNPSC Thervupettagam

திப்பு சுல்தானின் வாள் ஏலம்

May 30 , 2023 544 days 273 0
  • லண்டனில் நடந்த ஏலத்தில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மைசூர் ஆட்சியாளரான திப்பு சுல்தானின் வாள் 14 மில்லியன் பவுண்டு விலைக்கு ($17.4 மில்லியன் அல்லது ₹ 140 கோடி) விற்கப்பட்டது.
  • திப்பு சுல்தான் புகழுக்குக் காரணம் அவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த போர்களில் பெற்ற வெற்றியாகும்.
  • 1775 ஆம் ஆண்டு மற்றும் 1779 ஆம் ஆண்டு ஆகியவற்றுக்கு இடையில் பல முறை மராட்டியர்களுக்கு எதிராக இவர் போரிட்டார்.
  • இந்த வாள் திப்பு சுல்தானின் அரண்மனையில் ஒரு தனிப்பட்டத் தங்கும் பகுதியில் இருந்து கண்டெடுக்கப் பட்டது.
  • திப்பு சுல்தான் தனது அரசை மிகவும் தைரியமாகப் பாதுகாத்ததால் அவருக்கு "மைசூர் புலி" என்று பட்டப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்