தமிழ்நாடு மாநில அரசானது தியா மற்றும் ஈழவா சமூகத்தினர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC - Backward Class)என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
இவர்கள் கேரளாவின் எல்லைப் பகுதியிலும் நீலகிரி மாவட்டத்திலும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
அப்போதைய திருவாங்கூர் - கொச்சின் மாநிலத்தில் ஈழவா சமூகத்தினர் BC சமூகத்தினருக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருந்தனர்.
அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுக்கா ஆகியவை மதராஸ் மாநிலத்துடன் இணைக்கப்பட்ட பின்பும் கூட இவர்கள் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் BC என்ற சமூக அந்தஸ்திலேயே இருந்தனர்.