இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களின் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது இந்தியாவின் அகிம்சை வழி சுதந்திரப் போராட்டத்தின் தலைவரான M.K. காந்தி அவர்களின் நினைவு தினத்தைக் குறிக்கிறது.
1948 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பிர்லா பவனில் நடைபெற்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியில் M.K.காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.