மார்ச் 23 ஆம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இத்தினம் சாஹஹீத் திவாஸ் அல்லது சர்வோதயா தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
பகத் சிங், சுகுதேவ் தாப்பர் மற்றும் சிவ்ராம் ராஜகுரு ஆகியோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த மூவரும் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை பெறுவதற்காகப் போராடினர். இவர்கள் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டு தங்கள் இன்னுயிரை நீத்தனர்.
இவர்கள் சைமன் குழுவை எதிர்த்துப் போராடிய லாலா லஜபத் ராய் மற்றும் அவரது ஆதரவாளர்களை எதிர்த்து தடியடி நடத்தியதற்கு பழி வாங்குவதற்காக காவல் துறை அதிகாரியைக் கொலை செய்தனர்.
இந்த வீரத் தியாகிகள் தண்டனை பெற்ற வழக்கானது பின்னாளில் லாகூர் சதி வழக்கு என்று அழைக்கப்பட்டது.