TNPSC Thervupettagam

தியாகிகள் தினம் – மார்ச் 23

March 26 , 2018 2435 days 1603 0
  • மார்ச் 23 ஷஹீத் திவாஸ் அல்லது தியாகிகள் தினம் பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்ட மூன்று துணிச்சல் மிக்க வீரர்களை நினைவுகூற கடைபிடிக்கப்படுகிறது.

    

  • மார்ச் 23, 1931 அன்று, பகத்சிங், அவருடைய கூட்டாளிகளான சுக்தேவ், ஷிவ்ராம் ராஜ்குரு ஆகியோர், 21 வயது பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியான ஜான் சண்டெர்சைப் படுகொலை செய்ததற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
  • அவர்கள் தூக்கிலிடப்பட்ட இந்த நாள் நாடு முழுவதும் தியாகிகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
  • பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக சமூகப் புரட்சியாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான பகத்சிங்கின் வெளிப்படையான வன்முறையால் (Dramatic Violence) தனது 23வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
  • தன்னைப் பின்பற்றுபவர்களுடன் சைமன் குழுவிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட லாலா லஜபதிராயின் மீது தடியடி நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ்காட்டை பழிவாங்கத் துடித்த இம்மூவர் தவறுதலாக சண்டெர்சைப் படுகொலை செய்தனர்.
  • சில நாட்கள் கழித்து லாலா லஜபதிராய் காயங்களின் தீவிரத் தன்மையால் காலமானார்.
  • சண்டெர்ஸ் கொலை வழக்கில், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 11 மணி நேரத்திற்கு முன்னரே இம்மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்