TNPSC Thervupettagam

தியாகிகள் தினம் – ஜனவரி 30

January 31 , 2022 939 days 437 0
  • மகாத்மா காந்தி அவர்களின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 30 அன்று தியாகிகள் தினம் (அ) சாகித் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
  • 1948 ஆம் ஆண்டில் டெல்லியின் பிர்லா இல்லத்தில் உள்ள காந்தி ஸ்மிருதி எனுமிடத்தில் நாதுராம் கோட்சேவினால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
  • இந்த ஆண்டு தேசம் 74வது தியாகிகள் தினத்தினை அனுசரிக்கின்றது.
  • இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • பகத்சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாப்பர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மார்ச் 23 அன்றும் இந்தியாவில் தியாகிகள் தினம் அனுசரிக்கப் படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.  
  • அவர்கள் மூவரும் 1931 ஆம் ஆண்டின் இதே தினத்தில் தூக்கிலிடப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்