TNPSC Thervupettagam

தியானன்மென் படுகொலை-29 வது நினைவு வருடம்

June 18 , 2018 2352 days 674 0
  • தியானன்மென் சதுக்கப் போராட்டம் (Tiananmen Square protests)  அல்லது சீனப் படுகொலையின் 29-ஆம் வருட நினைவு தினம் 2018-ஆம் ஆண்டு ஜூன் 4- ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
  • 1989ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி அன்று சீனப் படையானது மக்களாட்சி ஆதரவுப் போராட்டக்காரர்களிடமிருந்து (Pro-democracy protesters) பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தை வன்முறை வழியில் மீட்டெடுத்தது.

  • இந்த நிகழ்வானது நவீன கால சீன வரலாற்றில் ஜூன் 4 நிகழ்வு (June Fourth Incident) என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இத்தின அனுசரிப்பன்று, அப்போதைய சீனப் படுகொலையின் போது   சீன இராணுவத்தின் பீரங்கிகள் பெய்ஜிங்கில் சுற்றுக் கொண்டிருக்கும் போது வெறும் இரு ஷாப்பிங் பைகளுடன் பீரங்கிகளின் வரிசையின் முன் நின்ற டேங்க் மேன் (Tank Man)  என்றழைக்கப்படும் தனி மனிதர் ஒருவரை சீன  மக்கள் நினைவு  கூர்ந்தனர்.
  • எந்த ஒரு பொதுவான காரணமோ அல்லது பொதுத் தலைவரே இல்லாத போதிலும், இப்போராட்டத்தின் பரந்த வேண்டுகோளானது ஓர் அரசியல் சீர்திருத்தமாகும். ஏனெனில் போராட்டக்காரர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினால் நாட்டினுடைய பொருளாதாரம் இயக்கப்படும் வழியை விரும்பவில்லை.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்