தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற 45-வது தியோதர் டிராபி-2018 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா-பி அணி தியோதர் டிராபியை வென்றுள்ளது.
தியோதர் டிராபி
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் அட்டவணை A வகை கிரிக்கெட் போட்டியே (List A cricket competition) தியோதர் டிராபி ஆகும்.
இந்திய கிரிக்கெட்டின் முதுபெரும் மனிதர் (Grand Old man of Indian Cricket) என்றழைக்கப்படும்B.தியோதர் பெயர் கொண்டு இப்போட்டிக்கு தியோதர் டிராபி எனப் பெயரிடப்பட்டது.
வட மண்டலம், தென் மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் என நாட்டின் 5 மண்டல அணிகளுக்கு இடையே இந்த 50 ஓவர் நாக் அவுட் (knockout) கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.
2015-16 ஆம் ஆண்டிற்கான சீசனில் தியோதார் டிராபியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
BCCI-ஐ ஆல் தேர்ந்தெடுக்கப்படும் விஜய் ஹசாரே கோப்பையின் இரு வெற்றியாளர் அணிகளான இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் தியோதர் கோப்பையில் பங்கேற்குமாறு மாற்றியமைக்கப்பட்டது.
வடக்கு மண்டல அணி இதுவரை 13 முறை தியோதர் டிராபியை வென்று அதிகமுறை தியோதர் டிராபியை வென்ற அணியாக சாதனை புரிந்துள்ளது.