தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது, பணித் தளம் அடிப்படையில் இணையதளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களுக்கான நல வாரியத்தினை அமைத்துள்ளது.
இது நிகழ்நிலையில் உணவு விநியோகம் மற்றும் வாடகை ஊர்தி திரட்டிகள் உள்ளிட்ட மின் வணிகச் சேவைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சேவை செய்யும் பணிகளை மேற்கொள்ளும்.
இந்த நல வாரியத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அளவில் தொழிலாளர்கள் பதிவு செய்வார்கள் என தொழிலாளர் துறை எதிர்பார்க்கிறது.