உணவுப் பாதுகாப்புத் துறையானது, திரவ நைட்ரஜனை எந்த வடிவில் உட்கொண்டாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு சிறுவன் திரவ நைட்ரஜனை உட்கொள்ளும் ஒளிப்படக் காட்சி சமூக ஊடகங்களில் வெளி வந்ததையடுத்து இந்த அறிவுரை வெளியிடப் பட்டது.
உலர் பனிக்கட்டி மற்றும் திரவ நைட்ரஜன் இரண்டும் தீங்கு விளைவிக்கக்கூடியவை.
உலர் பனிக்கட்டியின் வெப்பநிலை -78.5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
ஆனால் திரவ நைட்ரஜஜனின் வெப்பநிலை -196 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.
மேற்கூறிய இரண்டு பொருட்களும் அறை வெப்பநிலையில் தடிமனான வெண்மை நிற நீராவிகளை உருவாக்குகின்றன என்பதோடு மேலும் அவை பெரும்பாலும் உணவு தயாரித்தல் மற்றும் பதப்படுத்துதலில் ஒரு உறைதல் காரணியாகப் பயன்படுத்தப் படுகின்றன.