TNPSC Thervupettagam

திராவிடக் குடும்ப மொழிகள்

November 3 , 2023 260 days 270 0
  • இந்திய-தமிழ்நாடு மொழியியல் ஆய்வறிக்கை (LSI-TN) ஆனது ஜூலை மாதம் வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கையானது இந்தியத் தலைமைப் பதிவாளர் & மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணைய (RG&CCI) அலுவலகத்தின் மொழிப் பிரிவால் வெளியிடப் பட்டது.
  • படகா, செட்டி பாஷா, இருளா/இருளிகா, கதோடி, கோட்டா, மாலியத், பணியா, தோடா, சோலகா, உரலி ஆகிய மொழிகளை தமிழகத்தில் பேசப்படும் ‘திராவிடக் குடும்பத்தினைச் சேர்ந்த’ தாய் மொழிகளாக இந்த அறிக்கை வகைப்படுத்துகிறது.
  • இது தவிர, மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்படும் மற்றொரு தாய்மொழியான சௌராஷ்டிரா/சௌராஷ்டிரியை ‘இந்திய-ஆரிய குடும்பத்தைச்’ சேர்ந்ததாக அடையாளப் படுத்துகிறது.
  • இந்த அறிக்கையின்படி, தென்னிந்தியாவில் 60 மில்லியன் தமிழ் மொழி பேசுபவர்கள் உள்ளனர். மேலும், உலகளவில் 68 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள்.
  • 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 10,000-க்கும் அதிகமான பேசுபவர்களைக் கொண்ட 96 தாய்மொழிகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
  • ஒட்டுமொத்தமாக, தமிழக மாநிலத்தில் 142 தாய்மொழிகள் பேசுபவர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
  • மாநிலத்தின் 88.37% மக்களால் தமிழ் மொழி முதல் மொழியாகப் பேசப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் தெலுங்கு (5.87%), கன்னடம் (1.78%) மற்றும் மலையாளம் (1%) மொழி பேசுபவர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்