பால்வெளி அண்டத்தின் மிகப்பெரிய கருந்துளையைச் சுற்றி சுழல் வடிவத்தில் திருகியமைந்த வலுவான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு காந்தப்புலத்தை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் காந்தப்புலத்தின் அமைப்பு ஆனது சாகிட்டாரியஸ் A*, அல்லது Sgr A* எனப் படும் கருந்துளையின் விளிம்பிலிருந்து வெளிப்படுகிறது.
இது இதுவரை படம்பிடிக்கப்பட்ட ஒரே கருந்துளையைச் சுற்றியுள்ள அமைப்பு ஒன்றை ஒத்திருக்கிறது.
மிகப்பெரிய கருந்துளையானது மெஸ்ஸியர் 87 அல்லது M87 எனப்படும் அருகிலுள்ள அண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
வலுவான காந்தப்புலங்கள் ஆனது கருந்துளைகளுக்கான பொதுவான அம்சமாக இருக்கலாம் என்பதை இது குறிக்கிறது.
M87* என்ற M87 கருந்துளையைச் சுற்றியுள்ள காந்தப்புலம் ஆனது, சக்தி வாய்ந்த அயனியாக்கப்பட்ட காந்தப்புல தாரைகளை விண்வெளியில் செலுத்துவதற்கு மிகவும் உதவுகிறது.
Sgr A* கருந்துளையினைச் சுற்றி இன்றுவரை இத்தகைய அயனியாக்கப்பட்ட காந்தப் புல தாரைகள் கண்டறியப்படவில்லை என்றாலும், அவை இருக்கக் கூடும் என்றும், எதிர்காலத்தில் கண்டறியப்படும் என்பதை இது குறிக்கிறது.
Sgr A* நமது சூரியனை விட 4 மில்லியன் மடங்கு நிறை கொண்டது மற்றும் சுமார் 26,000 ஒளியாண்டுகள் - ஒளியானது பூமியிலிருந்து ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம், 5.9 டிரில்லியன் மைல்கள் (9.5 டிரில்லியன் கி.மீ.) - தொலைவில் அமைந்துள்ளது.