உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது, திரிபுராவின் மாநில சின்னத்தை அங்கீகரித்து உள்ளது.
திரிபுரா அரசின் மாநிலச் சின்னத்திற்கான முன்மொழிவு ஆனது, 2007 ஆம் ஆண்டு இந்திய மாநிலச் சின்னம் (பயன்பாட்டு ஒழுங்குமுறை) விதிகளின் 4(2)வது விதியின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு S.R. பொம்மை மற்றும் இந்திய ஒன்றிய வழக்கில், மாநிலங்கள் தேசியக் கொடியை அவமதிக்காத வகையில் அவற்றிற்கென சொந்தக் கொடிகளை வைத்தருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் மாநிலங்கள் அவற்றிற்கான சொந்தக் கொடிகளை வைத்திருப்பதைத் தடை செய்யவில்லை.