இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் திரிபுராவின் ராணி வகை அன்னாசிப் பழத்தை (Queen variety pineapple) திரிபுராவின் மாநிலப் பழமாக அறிவித்துள்ளார்.
ராணி அன்னாசிப் பழமானது முள்ளுடைய (spiny) தங்க மஞ்சள் (golden yellow) நிறமுடைய அன்னாசிப் பழமாகும். இது இனிமையான வாசமும், நறுமணச் சுவையும் கொண்டது.
வடகிழக்கு பிராந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் கழகம் (North Eastern Regional Agricultural Marketing Corporation) எனும் மத்திய பொதுத் துறை நிறுவனத்தின் உதவியின் மூலம் இந்த அன்னாசிப் பழமானது 2015 ஆம் ஆண்டு புவிசார் குறியீட்டைப் (Geographical Indication-GI) பெற்றது.
மேலும் குடியரசுத் தலைவர் திரிபுரா மாநிலத்தின் கோமதி மாவட்டத்தின் உதய்பூரில் உள்ள மாதா திரிபுரசுந்தரி ஆலயத்திலிருந்து தெற்கு திரிபுராவின் சப்ரூம் வரை, 73.71 கி.மீ. நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை-8-னுடைய பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த தேசிய நெடுஞ்சாலை - 8 ஆனது திரிபுரா மாநிலத்தை அஸ்ஸாம், மேகாலயா வழியாக நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றது.