திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரில் முதலாவது SEZஐ (சிறப்புப் பொருளாதார மண்டலம் - Special Economic Zone) அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த SEZ ஆனது வேளாண் சார்ந்த உணவு பதப்படுத்துதல், ரப்பர் சார்ந்த தொழில்கள் ஆகியவற்றில் முதன்மையாகக் கவனம் செலுத்த இருக்கின்றது.
இந்த SEZஆனது திரிபுரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தினால் உருவாக்கப்பட இருக்கின்றது.
முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10AAன் கீழ் SEZ பிரிவுகளுக்கான ஏற்றுமதி வருமானத்தில் 100% வருமான வரி விலக்கு வழங்கப்பட இருக்கின்றது.
SEZ ஆனது 12,000 திறன் சார்ந்த வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் இது அமைய இருக்கும் இடமானது சிட்டகாங் துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால் அதிக முதலீடுகளை ஈர்க்க இருக்கின்றது.