திரிபுராவில் இணைய வழி அமைச்சரவை முறை
October 3 , 2023
466 days
411
- திரிபுரா அரசானது அகர்தலாவில் இணைய வழி அமைச்சரவை முறையினை அறிமுகம் செய்துள்ளது.
- இது எண்ணிம உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அரசாங்கச் சேவைகள் மற்றும் தகவல்களின் எண்ணிமமயமாக்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- திரிபுரா, இந்தியாவில் இத்தகைய அமைப்பினை அறிமுகம் செய்யும் நான்காவது மாநிலமாகவும், இரண்டாவது வடகிழக்கு மாநிலமாகவும் மாறியுள்ளது.
- ஏற்கனவே உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இணைய வழி அமைச்சரவை முறையை அறிமுகப் படுத்தியுள்ளன.
- எதிர்காலத்தில் இம்மாநிலத்தில் நடைபெறும் அனைத்து அமைச்சரவை கூட்டங்களும் காகிதமில்லாத வகையில் இணைய வழியில் மேற்கொள்ளப்படும்.
- இது இம்மாதிரியிலான செயல்பாட்டில் கார்பன் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைக்கும்.
Post Views:
411