ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழில்சாலையின் 100 பழைய பயணிகள் இரயில் பெட்டிகளை வாகனங்களைச் சுமந்து செல்லும் பெட்டிகளாக மாற்றும் ஒரு பணியானது பொன்மலை இரயில் பணிமனையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
புதிதாக தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கொண்டுச் செல்வதற்காக சுமார் 176 பழைய பயணிகள் இரயில் பெட்டிகளைப் புதிய தலைமுறைத் தொழில்நுட்பம் கொண்ட வகையில் வாகனங்களைச் சுமந்து செல்லும் பெட்டிகளாக இது மாற்றியது.
இந்தியாவில் இரயில் பெட்டிகளை மாற்றியமைப்பதற்கான மற்றப் பட்டறைகளில் இது முன்னணியில் உள்ளது.