TNPSC Thervupettagam

திருத்தப்பட்ட இராஷ்ட்ரிய கோகுல் திட்டம் 2025

March 23 , 2025 11 days 56 0
  • கால்நடைத் துறையில், வளர்ச்சியை நன்கு அதிகரிக்கும் வகையில் திருத்தப்பட்ட இராஷ்ட்ரிய கோகுல் (RGM) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை அளித்து உள்ளது.
  • 2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரையிலான 15வது நிதி ஆணையச் சுற்றிற்காக இத்திட்டம் 3,400 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது.
  • 15,000 பசுக்களுக்கு 30 தங்குமிட வசதிகளை அமைப்பதற்கான மூலதனச் செலவில் 35% நிதி உதவியை இது வழங்குகிறது.
  • பால் பொருட்கள் உற்பத்தி சங்கங்கள் / நிதி நிறுவனங்களிடமிருந்து HGM IVF என்ற ஒரு இனப் பசுக்களைப் வாங்குவதற்காக விவசாயிகள் பெறும் கடன்களுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும்.
  • கடந்த பத்தாண்டுகளில் பால் உற்பத்தி 63.55 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2013-14 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 307 கிராமாக இருந்த தனிநபர் பால் கிடைக்கும் தன்மையானது 2023-24 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 471 கிராமாக உயர்ந்துள்ளது.
  • கடந்த பத்து ஆண்டுகளில், பால் பொருட்கள் உற்பத்தித் திறனும் சுமார் 26.34 சதவீதம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்