TNPSC Thervupettagam

திருத்தப்பட்ட முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கீட்டு விதிமுறைகள்

March 31 , 2025 2 days 58 0
  • பொருளாதாரத்தின் முன்னுரிமைத் துறைகளுக்கு மிகச் சிறப்பான முறையில் இலக்கு நிர்ணயித்து அதற்கு வங்கிக் கடனை வழங்கும் முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கீடு (PSL) குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
  • திருத்தப்பட்ட விதிமுறைகள் ஆனது புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கடன்களுக்கும் விரிவுபடுத்தப் படுகின்றன என்பதோடு இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அடிப்படையிலான மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு 35 கோடி ரூபாய் வரை வங்கிக் கடன்களை வழங்க வழிவகை செய்கின்றன.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கான (UCBs) PSL மீதான இலக்குகளை, சரி செய்யப்பட்ட நிகர வங்கிக் கடன் (ANBC) அல்லது நிதி அறிக்கையில் பதிவு செய்யப்படாத (CEOBSE) கடன் (PSL) ஆகியவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ, அதில் 60% ஆக உயர்த்தியுள்ளது.
  • இனிமேல் வங்கி சாராத நிதி நிறுவனங்களிடமிருந்து (NBFCs) வங்கிகள் வாங்கிய தங்க நகைகளுக்கு எதிராகப் பெறப்பட்ட கடன்கள் PSL ஆக தகுதி பெறாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்