TNPSC Thervupettagam

திருத்தியமைக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம்

September 20 , 2017 2671 days 983 0
  • பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு திருத்தியமைக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டம், தனிமனித, சமூக, பொருளாதார மற்றும் தேசிய வளர்ச்சிக்காக விளையாட்டை ஒரு முக்கிய கருவியாக உபயோகிக்க நோக்கம் கொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
  • இது இந்திய அளவிலான விளையாட்டிற்காக உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். இது ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட விளையாட்டுத்துறைகளில் சிறந்து விளங்கும் 1000 தடகள வீரர்களுக்கு வழங்கப்படும்.
  • இத்திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தடகள வீரரும் ஆண்டு ஊக்கத்தொகையாக ரூபாய் ஐந்து லட்சத்தை தொடர்ச்சியாக 8 ஆண்டுகளுக்கு பெறுவர்.
  • இத்திட்டம் நாடுமுழுவதும் 20 பல்கலைக் கழகங்களை விளையாட்டுத் துறையின் சிறப்பு மையங்களாக மாற்ற எண்ணுகிறது. இதன் மூலம் சிறந்த விளையாட்டு வீரர்கள் இரட்டை வழியான கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் தங்கள் நோக்கத்தை தொடர முடியும்.
  • இந்த திட்டம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்ட துடிப்பான மக்களை உருவாக்க எண்ணுகிறது.
  • இந்த திட்டம் 10 முதல் 18 வயதுகளில் சுமார் 200 மில்லியன் குழந்தைகளை ஒரு தேசிய உடற்பயிற்சி இயக்கத்தில் கொண்டு வர நோக்கம் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்