TNPSC Thervupettagam

திருநங்கையர் தினம் - ஏப்ரல் 15

April 18 , 2023 493 days 218 0
  • தமிழக அரசு ஏப்ரல் 15 ஆம் தேதியைத் திருநங்கையர் தினமாக அனுசரிக்கிறது.
  • நாட்டில் முதல் முறையாக திருநங்கையர் நல வாரியத்தை 2008 ஆம் ஆண்டில் இதே நாளில் தமிழ்நாடு அரசு  நிறுவியது.
  • 2006 ஆம் ஆண்டில், 'அரவாணி' என்னும் வார்த்தைக்கு மாற்றாக மிகவும் கண்ணியமாக  ‘திருநங்கை’ என்ற ஒரு பதத்தை முன்னாள்  முதல்வர் மு. கருணாநிதி மாற்றினார்.
  • இந்தப் பெயரிலேயே சமூக நலத்துறையின் கீழ்  ஒரு நல வாரியம் அமைக்கப் பட்டு உள்ளது.
  • இந்த ஆண்டு நிகழ்வின் போது மாநில அளவிலான ‘சிறந்த திருநங்கையருக்கான’ விருதை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான பி.ஐஸ்வர்யாவுக்கு முதல்வர் வழங்கினார்.   
  • வர் கடந்த 22 ஆண்டுகளாக திருநங்கையர் சமூகத்திற்குச் சேவை செய்து வருகிறார் என்பதோடு, நாட்டுப்புறவியல் மற்றும் நாடகம் மூலம் அவர்களைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
  • கிரேஸ் பானு மற்றும் மர்லிமா முரளிதரன் ஆகியோர் இந்த விருதினை முறையே 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்