திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சிகளின் புதிய மேயர்கள்
August 9 , 2024
106 days
141
- இந்த மாநகராட்சிகளின் மேயர்களான P.M.சரவணன் மற்றும் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் ஜூலை 03 ஆம் தேதி ராஜினாமா செய்தனர்.
- திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்களுக்கு, மேயர்களுக்கான தேர்தலை நடத்துமாறு மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.
- பொதுவாக தமிழகத்தில் மேயர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
- மறைமுகத் தேர்தல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களித்து மேயர் பதவிக்கான வெற்றி வேட்பாளரை தேர்ந்தெடுப்பர்.
- இரண்டாவது முறையாக கவுன்சிலர் பதவி வகிக்கும் திரு இராமகிருஷ்ணன் என்பவர் திருநெல்வேலி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- கோவை மாநகராட்சி மேயராக கவுன்சிலர் R. ரங்கநாயகி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
Post Views:
141