சென்னை வெள்ளப் பெருக்குப் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குறித்த திருப்புகழ் குழுவானது தனது இறுதி அறிக்கையை தமிழக முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளது.
இது ஒழுங்குமுறை கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், சென்னையில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை அளவிடுவதற்கும் மற்றும் வெள்ளப் பெருக்குப் பேரிடர் தணிப்பு மேலாண்மையில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த சட்ட முறை ஆளுமையினை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைத்துள்ளது.
குறிப்பிட்ட மழைநீர் வடிகால் திட்டங்களை வழங்குமாறு முதல்வர் அவர்கள் இந்தக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகரத்தில் உள்ள 600 மற்றும் ஒரு சில குறிப்பிட்ட பாதிக்கப்படக் கூடிய பகுதிகளுக்கான பகுதி சார்ந்த ஒரு விரிவான நீண்ட கால வெள்ள மேலாண்மை திட்டங்களையும் இக்குழு முன்மொழிந்துள்ளது.