TNPSC Thervupettagam

திருப்புமுனை செயல்பாட்டு நிரல் அறிக்கை 2022

October 16 , 2022 644 days 319 0
  • இது சர்வதேச எரிசக்தி முகமை (IEA), சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (IRENA) மற்றும் ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற உயர்நிலை சாம்பியன் ஆகிய அமைப்புகளால் வெளியிடப்பட்டது.
  • மின்சாரம், ஹைட்ரஜன், சாலைப் போக்குவரத்து, எஃகு மற்றும் வேளாண்மை ஆகிய ஐந்து முக்கியத் துறைகளில் உமிழ்வைக் குறைப்பதில் பதிவான முன்னேற்றத்தை இது மதிப்பிடுகிறது.
  • இது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டின் COP26 உச்சி மாநாட்டில் கோரப்பட்ட முதல் வகையான வருடாந்திர முன்னேற்ற அறிக்கையாகும்.
  • இது G7 அமைப்பு, சீனா மற்றும் இந்தியா உட்பட 45 உலக நாடுகளின் தலைவர்களின் ஒப்புதலுடன், உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேல் உள்ளடக்கியது.
  • இந்த அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஐந்து துறைகள் ஒருசேர உலகளாவியப் பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றத்தில் கிட்டத்தட்ட 60% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்