TNPSC Thervupettagam
September 28 , 2023 278 days 215 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான வாழ்வியல் அறிவியலுக்கான திருப்புமுனை பரிசு ஆனது கார்ல் ஜூன் மற்றும் டாக்டர் மைக்கேல் சடலைன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த இரண்டு அறிவியலாளர்களும் இரத்தப் புற்றுநோயில் (லுகேமியா) CAR-T நோய்த் தடுப்பு சிகிச்சையினை முதல் முதலில் பயன்படுத்தும் முன்னெடுப்பினை மேற் கொண்டனர்.
  • இந்த வகை சிகிச்சையானது நோயாளியின் உடலில் உள்ள சொந்த நோயெதிர்ப்பு உயிரணுக்களை எடுத்து, புற்றுநோய் செல்களைக் குறிவைத்து அழிக்கும் வகையில் மரபணு ரீதியாக கட்டமைக்கும் செயல்முறையினை உள்ளடக்கியது.
  • இந்த தொழில்நுட்பம் ஆனது புற்றுநோய் சிகிச்சை முறைகளில் புரட்சியை ஏற்படுத்த உதவியது.
  • மற்ற வாழ்வியல் அறிவியல் பரிசுகளானது தாமஸ் காசர், எலன் சிட்ரான்ஸ்கி மற்றும் ஆண்ட்ரூ சிங்கிள்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கணித்தத்திற்கான திருப்புமுனை பரிசு ஆனது சைமன் பிரெண்டலுக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • ஜான் கார்டி மற்றும் அலெக்சாண்டர் ஜமோலோட்சிகோவ் ஆகியோருக்கு அடிப்படை இயற்பியலுக்கான திருப்புமுனை பரிசு வழங்கப் பட்டுள்ளது.
  • இயற்பியல் மற்றும் கணிதத்தில் மேற்கொள்ளப்படும் ஆரம்பகாலத் தொழில் முறை சாதனைகளுக்காக ஆறு புதிய ஹொரைசன்ஸ் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஆரம்பகால ஆரம்பகாலத் தொழில் முறை சாதனைகளுக்காக பெண் கணிதவியல் நிபுணர்களுக்கு மூன்று மரியம் மிர்சகானி நியூ ஃபிராண்டியர்ஸ் பரிசுகள் வழங்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்