திருப்பூரின் கொடுவாய் அருகே உள்ள கோவில்பாளையத்தில் உள்ள தாளீகீஸ்வரர் கோயிலின் சுவர்களில் ‘வட்டெழுத்து’ பதித்த ஒரு கல்வெட்டு மற்றும் தமிழ் எழுத்து பதித்த எட்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இது 1,100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
‘வட்டெழுத்து’ பதிக்கப்பட்ட கல்வெட்டு ஆனது, கி.பி. (CE) 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையில் நடைமுறையில் இருந்த தமிழ் மொழியினை எழுதச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவமாகும்.
எட்டு தமிழ் கல்வெட்டுகளில் ஒன்று கொங்கு சோழ மன்னன் வீர இராஜேந்திரன் (1207-1256) அவர்கள் எழுதியது.
மீதமுள்ளவை அவரது பேரன் விக்ரம சோழன் அவர்களால் (1273-1305 CE) எழுத்தப் பட்டது.
இக்கிராமம் ஆனது தொன்மை வாய்ந்த கொங்குநாடு பகுதியின் ‘பொங்கலூர்காநாடு’ என்ற பகுதியில் உள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.