TNPSC Thervupettagam

திருப்பூர் கல்வெட்டுகள்

August 8 , 2024 107 days 204 0
  • திருப்பூரின் கொடுவாய் அருகே உள்ள கோவில்பாளையத்தில் உள்ள தாளீகீஸ்வரர் கோயிலின் சுவர்களில் ‘வட்டெழுத்து’ பதித்த ஒரு கல்வெட்டு மற்றும் தமிழ் எழுத்து பதித்த எட்டு  கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • இது 1,100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ‘வட்டெழுத்து’ பதிக்கப்பட்ட கல்வெட்டு ஆனது, கி.பி. (CE) 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையில் நடைமுறையில் இருந்த தமிழ் மொழியினை எழுதச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவமாகும்.
  • எட்டு தமிழ் கல்வெட்டுகளில் ஒன்று கொங்கு சோழ மன்னன் வீர இராஜேந்திரன் (1207-1256) அவர்கள் எழுதியது.
  • மீதமுள்ளவை அவரது பேரன் விக்ரம சோழன் அவர்களால் (1273-1305 CE) எழுத்தப் பட்டது.
  • இக்கிராமம் ஆனது தொன்மை வாய்ந்த கொங்குநாடு பகுதியின் ‘பொங்கலூர்காநாடு’ என்ற பகுதியில் உள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்