திருமணம் ரீதியான பலாத்காரம் குறித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தீர்ப்பு
February 20 , 2025 3 days 39 0
15 வயதிற்கு மேற்பட்டவராக அவர் இருந்தால், கணவர் அவரது சம்மதத்தைப் பொருட் படுத்தாமல் தனது மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக, பலாத்காரம் அல்லது இயற்கைக்கு மாறான ஒரு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட முடியாது என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணம் ரீதியான பலாத்காரம் தொடர்பாக சட்டத்தில் உள்ள ஒரு பாதுகாப்பானது, "இயற்கைக்கு மாறான பாலியல் உறவினை" ஒரு குற்றமாக்கிய இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 377 பிரிவிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையை குற்றமாக அறிவிக்கும் 375வது பிரிவானது, மனைவி 18 வயதை எட்டும் போது, "ஓர் ஆண் தனது சொந்த மனைவியுடன் பாலியல் உடலுறவு அல்லது பாலியல் செயல்களுக்கு" இந்த விதி நீட்டிக்கப்படவில்லை என்று கூறுகிறது.
மனைவியின் வயது 15 வயதுக்குக் குறைவாக இல்லாதபட்சத்தில், கணவரின் எந்த ஒரு பாலியல் உடலுறவு அல்லது பாலியல் செயலையும் கற்பழிப்பு என்று கூற முடியாது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மும்பை உயர் நீதிமன்றம் ஆனது, இது போன்ற வழக்குகளில் சம்மதம் பெறல் என்ற ஒரு கருத்தினை முன்வைத்தலை நிராகரித்து, 15 வயதிற்கு உட்பட்ட மனைவியுடன் அவரின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது என்பது பலாத்காரம் /பாலியல் வன்கொடுமை என்று தீர்ப்பளித்தது.
15 வயதிற்கு உட்பட்ட மனைவி ஒருவர் தான் பாலியல் ரீத்யான வன்கொடுமை செய்யப் பட்டதாக குற்றம் சாட்டியதை அடுத்து, குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையை நாக்பூர் அமர்வு உறுதி செய்தது.
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு ஆனது பலாத்காரம்/கற்பழிப்பு அல்ல என்றும், அத்தகைய விவகாரங்களில் மனைவியின் ஒப்புதல் பெறுவது என்பது மிகவும் பொருத்தமற்றது என்றும் கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ஆனது தீர்ப்பளித்தது.