TNPSC Thervupettagam

திரும்ப அழைத்தலுக்கான உரிமை

November 11 , 2020 1385 days 580 0
  • ஹரியானா மாநிலமானது ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் தனது பணியைச் சரிவர செய்யாத பட்சத்தில் அவரைத் திரும்ப அழைத்தலுக்கான உரிமை குறித்த ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது இரகசிய வாக்குப் பதிவின் மூலம் மேற்கொள்ளப் பட உள்ளது. அவர்களைத் திரும்ப அழைத்தலானது அவர்களுக்கு எதிராக 2/3 உறுப்பினர்களின் ஆதரவு (எதிராக வாக்களித்தல்) என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப் பட இருக்கின்றது.
  • ஹரியானா பஞ்சாயத்து ராஜ் (2வது திருத்தம்) மசோதா, 2020 என்ற மசோதா ஆனது அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.
  • இந்தத் திருத்தமானது வாக்காளர்களுக்கு உறுப்பினர்களின் பொறுப்புடைமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்த ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை வழங்குகின்றது.
  • இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே “மிகவும் பின்தங்கியவர்களுக்கு” 8% இடஒதுக்கீட்டை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்