திரும்பப் பெறப்படாத காலவரம்பு முடிந்த வைப்புத் தொகை மீதான வட்டி – புதிய விதிமுறைகள்
July 6 , 2021 1240 days 509 0
வங்கிகளில் காலவரம்பு முடிவடைந்த பின்பும் திரும்பப் பெறப் படாமல் இருக்கும் வைப்புத் தொகைகள் மீது வட்டி வருமானம் வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போது காலவரம்புடைய ஒரு வைப்புத் தொகை முதிர்வடைந்த பின்பும் திரும்பப் பெறப்படா விட்டால் அதில் மீதம் உள்ள தொகைக்கு வட்டியானது சேமிப்புக் கணக்கிற்கு வழங்கப் படும் வட்டி விகிதத்தில் வழங்கப் படுகிறது.
இந்தப் புதிய விதிமுறைகளானது அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதியியல் வங்கிகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தும்.