TNPSC Thervupettagam

திருவள்ளுவர் சிலையின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா

December 31 , 2024 13 days 125 0
  • கன்னியாகுமரியின் திரிவேணி சங்கமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவானது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
  • கன்னியாகுமரியில் உள்ள இந்த சிலையானது ‘பேரறிவுச் சிலை’ என்று அழைக்கப் படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இந்த சிலையானது, 2000 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் மக்களின் பார்வைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
  • இந்த சிலை மற்றும் பீடத்தின் மொத்த உயரம் 133 அடி (41 மீட்டர்) ஆகும்.
  • இது திருக்குறளின் 133 அத்தியாயங்களைக் குறிக்கிறது.
  • 95 அடி (29 மீட்டர்) உயரத்திலான திருவள்ளுவரின் சிற்பம் ஆனது 38 அடி உயரம் கொண்ட (12 மீட்டர்) பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பீடம் ஆனது திருக்குறள் உரையின் மூன்று பால்களில் முதல் பாலான அறத்துப் பாலின் 38 அத்தியாயங்களைக் குறிக்கிறது.
  • இச்சிலையானது இரண்டாவது மற்றும் மூன்றாவது பால்களின்- முறையே பொருள் மற்றும் அன்பு /காமம் - அத்தியாயங்களைக் குறிக்கிறது.
  • இந்த விழாவில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தையும் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • இது கடலின் மீது கட்டப்பட்ட இந்தியாவின் முதலாவது கண்ணாடிப் பாலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்