TNPSC Thervupettagam

திருவாசகத்தின் அச்சிடல் வரலாறு

September 8 , 2024 75 days 191 0
  • 1868 ஆம் ஆண்டில் சைவத் துறவி மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தினை திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழ் அறிஞர் கா.பீர் காத்தரொளி ராவுத்தர் வெளியிட்டார்.
  • ராவுத்தரின் திருவாசகப் பதிப்பு ஆனது, திருப்புன்கூர் சிவலோகநாதப் பண்டிதரால் சரி பார்க்கப் பட்டது.
  • இந்நூலானது, காஞ்சிபுரத்தில் திருவேங்கட முதலியார் என்பவர் நடத்திய இயற்றமிழ் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.
  • திருவாசகத்தில் உள்ள சிவபுராணம் பொதுவாக அகவல் என்று வர்ணிக்கப்படுகிறது,  ஆனால் ராவுத்தர் அது கலிவெண்பா என்பதை நிரூபிக்க வேண்டி தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டினார்.
  • இந்நூல் 140 வருட இடைவெளிக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் T.N.இராமச்சந்திரன்  தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழறிஞராவார்.
  • அச்சிடப்பட்ட சைவ இலக்கியங்களில் திருவாசகம் முதன்மையானதாகும்.
  • இது 1835 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து திருக்கோவையார் 1841 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்