2024-25 ஆம் ஆண்டிற்கான திறந்த நிலையிலான சந்தை விற்பனைத் திட்ட (உள்நாட்டு) [OMSS(D)] கொள்கையில் மத்திய அரசு ஒரு திருத்தத்தினை அறிவித்துள்ளது.
இந்தக் கொள்கையானது உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்துவதையும் பல்வேறு பங்குதாரர்களுக்கு அரிசியை மிக திறம்பட விநியோகிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இணைய வழி ஏலங்களில் பங்கேற்க வேண்டிய தேவை இல்லாமல், மாநில அரசுகள், மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் சமூக உணவகங்களுக்கு அதனை விநியோகம் செய்வதற்காக, அரிசியின் அடக்க விலையானது குவிண்டாலுக்கு சுமார் 2,250 ரூபாய் (இந்தியா முழுவதும்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.