வரலாற்றில் முதல் முறையாக ரிசர்வ் வங்கியானது திறந்த நிலை சந்தைச் செயல்பாடுகள் மூலம் (open market operations) மாநில மேம்பாட்டுக் கடன்களை (State Development Loans) வாங்குவதாக அறிவித்துள்ளது.
பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கும் சரியான விலையை நிர்ணயம் செய்வதற்கும் வேண்டி இது ஒரு "சிறப்புச் செயல்பாடு" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
பத்திரங்கள் வாங்கப்படும் தொகை ரூபாய் 10000 கோடிகளாக இருக்கும்.
மாநிலங்களால் வழங்கப்பட்ட பத்திரங்களை உள்ளடக்கிய மாநில மேம்பாட்டுக் கடன்களின் ஒரு தொகுப்பிற்காக வேண்டி திறந்தநிலை சந்தைச்செயல்பாடுகள் நடத்தப் படும்.