தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமலைசமுத்திரம் கிராமத்தில் 4வது திறந்தவெளி சிறைச்சாலை விரைவில் தொடங்கப்படவிருக்கிறது.
தமிழ்நாடு சிறைச்சாலை கையேட்டின்படி (திறந்தவெளி சிறைச்சாலை) திறந்தவெளி சிறைச்சாலை என்பது தற்பொழுது உள்ள சிறைச்சாலைகளில் கூட்டத்தைக் குறைப்பது, சிறையில் உள்ளவர்களின் எதிர்கால மறுவாழ்விற்காக சரியான விவசாய முறையை கற்றுத் தருவது மற்றும் விவசாய உற்பத்தியில் சிறைச்சாலைகள் தன்னிறைவடைவதாகும்.
மேலும் இதன் நோக்கம் சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறிதளவு சுதந்திரத்தை அளிப்பதாகும்.
1860-ன் மத்திய சட்டம் XLV விதிகளின்படி தண்டனை பெற்றோர், வழக்கமாகக் குற்றம் புரிபவர், பெண் கைதிகள், அரசியல் கைதிகள், அடியாள் மற்றும் கொலை செய்வதை தொழிலாகக் கொண்டவர், முதல் வகுப்பு கைதிகள் மற்றும் தப்பி செல்வதற்கு வாய்ப்புள்ள கைதிகள் ஆகியோருக்கு திறந்தவெளி சிறைச்சாலை விதிகள் பொருந்தாது.
சிறைத் துறையானது ஏற்கெனவே இந்த வகையான திறந்தவெளி சிறைச்சாலையை கோயமுத்தூர், சேலம் மற்றும் சிவகங்கையில் அமைத்துள்ளது. இங்கு தண்டனை பெற்றோர் மற்றும் ஆயுள் தன்டணை கைதிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.