மத்திய அரசின் திட்டமான 'திறன் இந்தியா திட்டத்தினை (SIP)' 2026 ஆம் ஆண்டு வரை தொடர்வதற்கும் மறுசீரமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பின்வரும் மூன்று முக்கியக் கூறுகள், தற்போது "திறன் இந்தியா திட்டத்தின்" கூட்டு மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 (PMKVY 4.0),
பிரதான் மந்திரி தேசியத் தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டம் (PM-NAPS), மற்றும்
ஜன் சிக்சான் சன்ஸ்தான் (JSS) திட்டம்
PMKVY 4.0 திட்டம் ஆனது, சிறப்பு திட்டங்கள் (SP) மற்றும் மறு திறன் வழங்கீடு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட குறுகிய காலப் பயிற்சி (STT) மூலம் தேசிய திறன் தகுதிகள் கட்டமைப்பு (NSQF) உடன் நன்கு இணைக்கப்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்குகிறது.
JSS திட்டம் ஆனது ஒரு சமூகம் சாரந்த திறன் முன்னெடுப்பாகும்.
இது தொழில் துறைப் பயிற்சியைக் குறிப்பாக பெண்கள், கிராமப்புற இளையோர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு மற்றும் 15 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு மிக அணுகக் கூடியதாகவும், தகவமைப்பு மிக்கதாகவும், உள்ளடக்கிய வகையிலானதாகவும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.