TNPSC Thervupettagam

திறன் குறியீடு 2025

February 27 , 2025 5 days 75 0
  • இந்தியாவின் பட்டதாரிகளின் திறன் குறியீடு 2025 என்ற புதிய அறிக்கையை மெர்சர் -மெட்ல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • இதன்படி இந்தியப் பட்டதாரிகளில் 42.6 சதவீதம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பிற்குத் தகுதியானவர்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • இது 2023 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 44.3 சதவீதத்திலிருந்துப் பதிவாகியுள்ள ஒரு சரிவைக் குறிக்கிறது.
  • நிறுவனங்களின் திறன்சார் தேவைகளுக்கும் பட்டதாரிகளிடம் உள்ள திறன்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது.
  • முதல் நிலைக் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்றவர்கள் 48.4 சதவீதத்தில் அதிக வேலை வாய்ப்புத் திறனைக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இரண்டாம் நிலை (46.1 சதவீதம்) கல்லூரிகளும் மற்றும் மூன்றாம் நிலைக் கல்லூரிகளும் (43.4 சதவீதம்) உள்ளன.
  • மாநிலங்களில், டெல்லி (53.4 சதவீதம்), இமாச்சலப் பிரதேசம் (51.1 சதவீதம்) மற்றும் பஞ்சாப் (51.1 சதவீதம்) ஆகியவை அதிக வேலைவாய்ப்புத் தகுதியுள்ள பட்டதாரிகளை உருவாக்குகின்றன.
  • இந்தியப் பட்டதாரிகளில் சுமார் 46 சதவீதம் பேர் தற்போது செயற்கை நுண்ணறிவு & இயந்திரக் கற்றல் சார்ந்த பணிகளில் பணி புரியத் தகுதியானவர்கள் என்பதோடு இது 2023 ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்