ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது (United Nations Development Programme-UNDP), தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் நம்பிக்கை வேண்டியோருக்கான திறன் மேம்பாட்டு மையம் (Skill development centre for clients of Bharosa) எனும் பாதிக்கப்பட்ட துயருடைய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு ஆதரவு மையத்தை துவங்க உள்ளது.
பாதிக்கப்பட்ட (vulnerable) மற்றும் நலிவு நிலை பெண்களுக்கு (marginalised women) திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பதே இத்தொடக்கத்தின் நோக்கமாகும்.
திஷா திட்டத்தின் (Disha project) கீழ் ஹைதராபாத் காவல்துறை மற்றும் ஐநா வளர்ச்சி திட்ட அமைப்பு ஆகியவற்றிற்கிடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் வழியே இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.
பரோசா (நம்பிக்கை) என்பது 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் நகர காவல்துறையால் துவங்கப்பட்ட ஓர் தொடக்கமாகும். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவினை வழங்கும் ஓர் நடப்பு நிலை வசதிகளினைக் (state-of-the-art centre) கொண்ட மையமே பரோசா மையமாகும்.