'முதல் திறன்பேசிகளின் காலம் மற்றும் மன நலன் சார்ந்த ஒரு விளைவு' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் அமைந்துள்ள சேபியன் லேப்ஸ் என்ற லாப நோக்கற்ற நிறுவனமானது இந்த ஆய்வினை மேற்கொண்டது.
இது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 14 முதல் 18 வயது வகுப்பினைச் சேர்ந்த 27,969 வயது வந்தோர் மத்தியில் நடத்தப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த 4,000 இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் இதில் பங்கு பெற்றனர்.
6 வயதில் திறன்பேசிக்கான அணுகலைப் பெற்ற இளம் பெண்கள் இளம் பருவத்தினர் ஆகியோரைப் போலவே அதிக உணர்ச்சிகரமான சூழல்கள் மற்றும் "மனநலம் சார்ந்த கடுமையான சவால்களை" எதிர் கொண்டதாக கூறியுள்ளனர்.
அதே சமயம், 18 வயதிற்குப் பிறகு தனது முதல் திறன்பேசிகளைப் பெற்ற நபர்களுக்கு மன உளைச்சலை எதிர் கொண்டதற்கான வாய்ப்பானது குறைவாக உள்ளது.