மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (IIT - Indian Institute of Technology) ஆதரிக்கப் படும் “அந்தாரிக்ஸ்” என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமானது “திறன்மிகு குப்பைக் கூடை அமைப்பை” வடிவமைத்துள்ளது.
இது மருத்துவமனைகள், அதன் வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட மண்டலங்களில் உற்பத்தியாகும் கழிவுகளின் மூலம் கோவிட் – 19 பரவலைத் தடுப்பதற்காகப் பணியாற்றுகின்றது.
“ஏர் பின்” அல்லது காற்றுக் கூடை என்று அழைக்கப்படும் இந்த கூடையானது IIT- மதராஸினால் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது திறன் பேசிகளின் மூலம் கழிவுகள் சேரும் நிலைகளின் மீது இயந்திரத்தினாலான கண்காணிப்பை அனுமதிக்கின்றது.