திறன்மிகு விவசாயம் பற்றிய கூடுகை (‘Smart Agriculture Conclave’) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி - தொழில்நுட்பவியல் துறையால் (Department of Bio-Technology -DBT) புதுதில்லியில் ஒருங்கிணைக்கப்பட்டது.
கூடுகை நிகழ்ந்த நாள் : ஆகஸ்ட் 30 , 31
இந்தக் கூடுகையினை இந்திய உயிரி - தொழில்நுட்பவியல் துறையுடன் இணைந்து இங்கிலாந்தின் உயிரி - தொழில்நுட்ப துறையும் (Biotechnology and Biological Sciences Research Council – BBSRC) ,இங்கிலாந்து ஆராய்ச்சிக் குழுமமும் (Research Councils UK - RCUK) ஒருங்கிணைத்தன.
இக்கூடுகையின் முடிவாக, இந்தியாவில் ‘விவசாய மண்டலம்’ (FarmerZone) அமைக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உறுதி ஏற்றுள்ளது.
விவசாய மண்டலமானது, சிறு, குறு மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாய மக்களுக்கு இலவச திறன்மிகு தொழில்நுட்ப உதவிகளை ஏற்படுத்தி தர உருவாக்கப்படவுள்ளது. மேலும், விவசாய பொருட்களை நேரடியாக விற்பதற்காக ‘விற்பனை சந்தை மண்டலம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.