TNPSC Thervupettagam

திறன்மிகு வேளாண் ஹெலிகாப்டர்

July 29 , 2019 1947 days 598 0
  • சென்னை ஐஐடியின் மாணவர்கள் வேளாண் நிலங்களில் விவசாயிகள் கைகளால் மருந்துகளைத் தெளிப்பதை ஒழிப்பதற்காக திறன்மிகு வேளாண் ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளனர்.
  • திறன்மிகு வேளாண் ஹெலிகாப்டரின் தற்போதைய பதிப்பானது 15 லிட்டர் பூச்சிக் கொல்லியை எடுத்துச் செல்லும் திறனுடைய ஒரு ஆளில்லா ஹெக்சாகாப்டர் ஆகும்.
  • இது 100 சதவீத துல்லியத் தன்மையுடன் பூச்சிக் கொல்லி மருந்துகளை 10 மடங்கு வேகமாக கையால் தெளிப்பதற்கு ஆகும் அதே செலவில் தெளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆளில்லா விமானமானது 1-1.5 மீட்டர் உயரமுள்ள பயிர்களில் நன்றாக தெளிப்பை மேற்கொள்ளும்.

IIT-Madras students create smart agricopter to spray pesticides 1

  • பயிர் ஆரோக்கியத்தின் அடிப்படையில் விளைநிலங்களை வரைபடமிடலுக்கென பன்னிற புகைப்படக் கருவி  பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது கடந்த ஜுன் மாதம் பம்பாய் ஐஐடியில் நடைபெற்ற இந்திய புத்தாக்க வளர்ச்சித் திட்ட பல்கலைக் கழகப் போட்டியிலும் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்