TNPSC Thervupettagam

திறம் வாய்ந்த வான்வளிக்கள எதிர்ப்பு ஆயுதம் (SAAW) - வெற்றிகர சோதனை

August 20 , 2018 2160 days 659 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மித எடை கொண்ட மென்சரிவு (Glide) குண்டான திறம் வாய்ந்த வான்வளிக்கள எதிர்ப்பு ஆயுதத்தை (SAAW- Smart Anti Airfield Weapon) இந்திய விமானப் படை விமானத்திலிருந்து தூக்கி எறிந்து DRDO ஆனது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • SAAW திட்டமானது இந்தியாவின் முதலாவது உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்படும் வான்வெளிக்கள எதிர்ப்பு ஆயுதத் திட்டமாகும். இத்திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அரசாங்கம் செப்டம்பர் 2013-ல் வழங்கியது.
  • இந்திய விமானப் படை (IAF - Indian Air Force) மற்றும் இம்ராத் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மத்திய நிறுவனமான பாதுகாப்பு ஆராயச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO - Defence Research and Development Organisation) இதை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.
  • SAAW என்பது நீண்ட தூரத்திற்கு மிதமான எடை கொண்ட உயர் துல்லியத் தன்மையுடைய வழிகாட்டும் வான்வளிக்கள எதிர்ப்பு ஆயுதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்