TNPSC Thervupettagam

தில்லியின் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டம் – 2019

November 6 , 2019 1719 days 680 0
  • ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டத்தின் மூன்றாவது பதிப்பு தற்பொழுது தில்லியில் தொடங்கியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டமானது ஒரு மகிழுந்துப் பங்கீட்டு முறையாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தில் ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளிலும் கடைசி இலக்கத்தில் இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலைகளில் அனுமதிக்கப் படும்.
  • தில்லியில் உள்ள சாலைகளில் இயங்கும் போக்குவரத்து அல்லாத அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பிற மாநிலங்களிலிருந்து தில்லிக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும்.
  • ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டத்தைச் செயல்படுத்தும் போது தில்லி மெட்ரோ ரயில் கழகமானது 61 கூடுதல் பயணச் சேவைகளை வழங்க இருக்கின்றது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், அவசர ஊர்தி வாகனங்கள் & அமலாக்கத் துறை வாகனங்கள், சீருடையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் மகிழுந்துகள் உள்ளிட்ட 29 வகை வாகனங்கள் இந்த ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளன.
  • இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் மட்டுமே தனியாக ஓட்டிச் செல்லும் வாகனங்கள், பெண்களை மட்டுமே கொண்டுள்ள மகிழுந்துகள் மற்றும் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுடன் வாகனத்தை இயக்கும் பெண்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட இருக்கின்றது.
  • மேலும் மாற்றுத் திறனாளிகளைக் கொண்டுள்ள மகிழுந்துகள் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றிற்கும் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் படுகின்றது.
  • ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன எண் திட்டத்திலிருந்து இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப் படுகின்றன.
  • தில்லி அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் வாகனங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் விதிவிலக்கு கிடையாது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் தனியாருக்குச் சொந்தமான ழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள் மற்றும் இரண்டு வகை ஆற்றலால் இயங்கும் கலப்பு எஞ்சின் கொண்ட  வாகனங்களுக்கும் இந்த முறை விலக்கு அளிக்கப்பட மாட்டாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்