TNPSC Thervupettagam

தில்லியில் இரண்டாவது மேகக் கணினி (cloud) பகுதி

March 6 , 2020 1599 days 557 0
  • கூகுள் நிறுவனமானது தனது 2வது இந்திய மேகக் கணினிப் பிராந்தியத்தை 2021 ஆம் ஆண்டில் தில்லியில் திறக்க இருக்கின்றது.
  • தில்லி கிளவுட் பிராந்தியமானது சேவைத்துறை பிரச்சினைகளிலிருந்துப் பாதுகாப்பு அளிப்பதற்காக மூன்று மண்டலங்களைக் கொண்டிருக்கும்.
  • முதலாவது இந்திய மேகக் கணினிப் பகுதியானது மும்பையில் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இது சுகாதார மற்றும் நிதிச் சேவைகளுக்கும் நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், கூகுள் நிறுவனமானது 22 கிளவுட் தரவு மையங்களைக் கொண்டுள்ளது. கூகுள் கிளவுட் மையங்கள் பிற நிறுவனங்களின் தரவை அந்தப் பிராந்தியத்திற்குள்ளேயே சேமிக்க உதவுகின்றன.

கிளவுட் (cloud) பகுதி

  • கிளவுட் பகுதி என்பது தங்களது தரவுகளைச் சேமித்து வைக்கக் கூடிய ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடமாகும்.
  • இதற்காக பெரும்பாலான பகுதிகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மண்டலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்