TNPSC Thervupettagam

திவால் மற்றும் நொடித்தல் குறியீடு (திருத்த) மசோதா, 2019

August 15 , 2019 2085 days 729 0
  • இந்த மசோதா 2016 ஆம் ஆண்டின் திவால் மற்றும் நொடித்தல் குறியீட்டில் திருத்தம் செய்கின்றது.
  • திவால் என்பது தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களின் நிலுவையிலிருக்கும் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கும் ஒரு சூழ்நிலையாகும்.
  • இந்தக் குறியீடு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மத்தியில் இருக்கும் திவால் நிலைமையை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட கால அளவிலான செயல்முறையை அளிக்கின்றது.
முக்கியத் திருத்தங்கள்
  • இந்த குறியீட்டின் கீழ், திவால் தீர்வு நடைமுறையை ஆரம்பிப்பதற்காக ஒரு கடன் பெற்றவர் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் முன்பாக ஒரு விண்ணப்பத்தைத்  தாக்கல் செய்யலாம்.
  • இந்த தீர்ப்பாயம் 14 நாட்களுக்கு உள்ளாக கடனைத் திருப்பி செலுத்தத் தவறிய நிலையைக் கண்டறிய வேண்டும்.
  • அதன்பின் கடன்நிதி பெற்றவர்கள்  உள்ளடங்கிய குழு ஒன்று திவால் தீர்வு நடைமுறை தொடர்பாக முடிவுகளை எடுப்பதற்காக அமைக்கப்படும்.
  • இந்த குழு திவால் நிபுணர் ஒருவரை நியமிக்கும். அவர் திவால் சரியாக்கல் திட்டம் ஒன்றை அக்குழுவிடம் சமர்ப்பிப்பார்.
  • பின் அந்தக் குழு அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் 180  நாட்களுக்கு உள்ளாக அந்த திவால் தீர்வு நடைமுறை முடிக்கப்பட்டாக வேண்டும்.
  • ஒருவேளை தீர்வு நடைமுறை அக்குழுவால் நிராகரிக்கப்பட்டால் கடன் வாங்கியவர் சொத்துக்களைப் பிரித்து விற்க முயல்வார்.
  • இந்தத் தீர்வு நடைமுறை ஒருவேளை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதலளித்தால் மீண்டும் ஒரு 90 நாட்கள் காலகட்டத்திற்கு நீட்டிக்கப்படும்.
  • இந்தக் குறியீடு திவால் தீர்வு நடைமுறை 180 நாட்களுக்குள்ளாகவும் 90 நாட்கள் அளவிற்கு ஒரு நீட்டிக்கப்பட்ட காலகட்டத்திற்கு உள்ளாகவும் முடிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகின்றது.
  • இந்த மசோதா தற்போது திவால் தீர்வு நடைமுறை 330 நாட்களுக்கு உள்ளாக தீர்க்கப்பட வேண்டுமென்று கூறுகின்றது.
சுருக்கம்
  • இந்த மசோதா மூன்று முக்கிய விவகாரங்கள் மீது கவனம் செலுத்துகின்றது.
  • முதலாவதாக இது கால வரம்புகள் தொடர்பான விதிமுறைகளைப் பலப்படுத்துகின்றது.
  • இரண்டாவது இது எந்தவொரு தீர்வு நடைமுறையிலும் குறைந்தபட்ச நஷ்ட ஈடுகளைச் செயல்பாட்டிலிருக்கும் கடன் பெற்றவர்களுக்கு குறிப்பிடுகின்றது.
  • மூன்றாவதாக இது கடன் பெறுபவர்கள் குழுவின் பிரதிநிதி (வீடு வாங்குபவர்) எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்