TNPSC Thervupettagam

திவ்யாங் சாரதி – அலைபேசிச் செயலி

September 27 , 2017 2616 days 1008 0
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மேம்படுத்தும் பதிப்பிலான (Beta version) “திவ்யாங் சாரதி” எனும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகிடத்தக்க மற்றும் எளிதில் தகவல்களை பெறக்கூடிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • மாற்றுத் திறனாளிகள் சார்ந்த திட்டங்கள், ஊக்கத்தொகை, நிறுவன ஆதரவுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அளித்து அவர்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
  • இந்தச் செயலி "சுகம்யா பாரத் அபியான்" எனும் அணுகிடத்தக்க இந்தியா எனும் பிரச்சாரத்தின் (Accessible India Campaign) தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து தேவையான தகவல்களும் அணுகிடத்தக்க வகையில் கட்டாயம் இருக்க வேண்டுமென கூறும் மாற்றுத்திறனாளிக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் கூறுகளோடும் (Rights of person with disability Act -2016), உலகளாவிய அணுகலுக்கான ஐ.நாவின் ஊனமுற்றோர் உரிமைகள் சாசனத்தின் கொள்கைகளோடும் (United nation Convention on Right of Persons with disability) இந்தச் செயலி இணக்கமுடையது.
  • குரல் பதிவை உரைப் பதிப்பாக (Audio note to text), மாற்றும் மென்பொருள் உள்ளடக்கமும், பயன்பாட்டளர்களின் தேவைக்கேற்ப எழுத்துரு அளவை மாற்றியமைக்கும் வசதிகளும் இருப்பது இச்செயலியில் உள்ள முக்கிய சிறப்பம்சங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்